சமூக சிந்தனையோடு ஒன்றிணைந்த இயற்கை ஆர்வலர்கள்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த கோவளவேடு பகுதிகள் 5 ஏக்கர் பரப்பளவில் குறுங்காடு அமைக்க ரோட்டரி ஆப் நங்கநல்லூர் எலைட் மற்றும் எக்ஸ்னோரா அமைப்பு இணைந்து காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய சமூக அமைப்புகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை ஒன்றிணைத்து குறுங்காடு அமைத்திட அதில் 2000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்திட திட்டமிடப்பட்டது.
இந்த குறுங்காடு அமைப்பதற்கான தொடக்கப் பணியினை கோவளவேடு ஊராட்சி மன்ற நிர்வாகத்தோடு இணைந்து இத்திட்டத்தை செயல் வடிவில் கொண்டு வந்திட முயற்சிகளானது மேற்கொள்ளப்பட்டு அதற்கான தொடக்கப் பணியாக இன்றைய தினம் கிராம மக்கள் ஒன்றிணைத்து அவர்களது பெயரில் மரக்கன்றுகளை நட வைத்தனர்.
மேலும் இந்த தொடக்க விழாவையொட்டி எக்ஸ்னோரா அமைப்பின் உறுப்பினர் ஜானகிராமன் மற்றும் கோவளவேடு ஊராட்சி மன்ற தலைவர் ரவி ஆகியோர் சமூக நோக்கோடு செயலாற்றிவரும் இயற்கை ஆர்வலர்களுக்கும், சமூக அமைப்புகளையும் பாராட்டி அவர்களுக்கு கௌரவிக்கப்பட்டது.
குறுங்காடு அமைப்பதற்காக நடவு செய்யும் மரகன்றுகளை பராமரிக்க தேவையான தண்ணீர் வசதி ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் தண்ணீர் வசதியானது குழாய் பதிப்புகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும், இந்த குறுங்காடு அமைக்கும் பணிக்காக 2000 மரக்கன்களை நடவு செய்து அதனை ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் பராமரிக்கப்படவேள்ளது குறிப்பிடதக்கது.
.jpg)
.jpg)

No comments
Thank you for your comments