Breaking News

காஞ்சிபுரம் ஸ்ரீ முத்தீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை


படவிளக்கம் : காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜை


காஞ்சிபுரம், ஆக.2:

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள முத்தீஸ்வரர் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

சிவனடியார்களில் ஒருவரான திருக்குறிப்பு தொண்ட நாயனாருக்கு சிவபெருமான் முக்தியளித்த பெருமைக்குரிய கோயில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள முத்தீஸ்வரர் கோயில்.

இக்கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.திரளான பெண்கள் திருவிளக்கு வழிபாட்டில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் சரவணக்குமார்,கோயில் அர்ச்சகர் தினேஷ்குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.


No comments

Thank you for your comments