காஞ்சிபுரம் சங்கரா செவிலியர் கல்லூரியில் திருவிளக்கு வழிபாடு
காஞ்சிபுரம், ஆக.14:
காஞ்சிபுரம் சங்கரா செவிலியர் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற திருவிளக்கு வழிபாட்டினை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் பம்மல்.விஸ்வநாதன் தொடக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் சங்கரா செவிலியர் கல்லூரியின் 4 வது ஆண்டு நிறைவையொட்டி கல்லூரி வளாகத்தில் திருவிõளக்கு வழிபாடு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராதிகா தலைமை வகித்தார்.
நிர்வாக அலுவலர் புவனா முன்னிலை வகித்தார்.கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் பம்மல்.விஸ்வநாதன் திருவிளக்கு வழிபாட்டினை தொடக்கி வைத்து வழிபாடு நடத்தப்படுவதன் நோக்கம்,வ ழிபாட்டின் பயன்கள் குறித்து விளக்கினார்.
கல்லூரி மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டு மலர்கள்,குங்குமம் ஆகியனவற்றால் திருவிளக்கு பூஜை செய்தனர்.
No comments
Thank you for your comments