Breaking News

காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவை பார்வையிட்ட ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள்

காஞ்சிபுரம், ஆக.4:

ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவை பார்வையிட்டு பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பத்தை கேட்டு தெரிந்து கொண்டனர்.


ஆஸ்திரேலியா நாட்டின் பொருளாதாரப்பிரிவு முதன்மை செயலாளர் ஜோய்வுட்லி தலைமையில் அந்நாட்டின் தூதரக அதிகாரிகள் காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவை பார்வையிட்டனர்.

காஞ்சிபுரத்தில் பட்டுப் புடவைகள் உற்பத்தி செய்யப்படும் தொழில் நுட்பங்கள்,பட்டுப்பூங்காவால் கிடைத்துள்ள வேலைவாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள், பட்டுச் சேலைகளின் தரம் ஆகியன குறித்து பட்டுப்பூங்காவின் தலைவர் டி.சுந்தர்கணேஷ் விரிவாக விளக்கிக் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகளை காஞ்சிபுரத்தில் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பட்டுப்பூங்காவின் செயல் இயக்குனர் பி.ராமனாதனிடம் விவாதித்தனர். 

கலந்துரையாடலின் போது பட்டுப்பூங்கா இயக்குநர்கள், வடிவமைப்பாளர்கள் பலரும் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments