450 கிலோ எடை கொண்ட ஐஸ் கட்டியை உடைத்து சாதனை
450 கிலோ எடை கொண்ட ஆளுயர இரண்டு ஐஸ் கட்டியை 10 நிமிடங்கள் தன் உடம்பில் வைத்து அவரின் மாணவர்கள் சுத்தியலால் அடித்து உதைத்து சாதனை படைத்த வீரர்
காஞ்சிபுரத்தில் இஸ்ஹிட்ரியு கராத்தே சார்பில் அதன் நிறுவனரும் பயிற்சியாளருமான ஏ.நூர் முகமது அவர்கள் சாதனை நிகழ்ச்சி இன்று மாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் இரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு 450 கிலோ எடை கொண்ட அளுயர இரண்டு ஐஸ் கட்டியை 10 நிமிடங்கள் தன் உடம்பில் வைத்து அவரின் மாணவர்கள் சுத்தியலால் உடைக்கும் வரை அசைவற்று படுத்து சாதனை புரிந்துள்ளார்.
இந்த சாதனையில் இருதயம் நின்றுவிட அதிக வாய்யப்புள்ளது. அதை பொருட்படுத்தாமல் கராத்தே மாஸ்டர் நூர் இந்த சாதனையை செய்துள்ளார்.
மேலும் இவர் கராத்தே சார்பில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற 250க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கோப்பையும், பாராட்டு சான்றிதழ்களும் ரோட்டரி சங்கம் மாவட்ட ஆளுநர் பரணிதரன் கலந்து கொண்டு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் டெம்பிள் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர், பல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். பி. சதீஷ்குமார், அன்னிபெசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேரன், காஞ்சிபுரம் மாவட்டம் வில்வித்தை சங்கத்தின் தலைவர் உசேன் பாஷா பொருளாளர் ஆர். சங்கரநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments