காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.83.72 லட்சம்
காஞ்சிபுரம், ஆக.28:
மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில் உண்டியல்கள் கடந்த 20.6.2024 ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் திறந்து எண்ணப்பட்டன.
கோயிலில் இருந்த இரு உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த தொகை ரூ.83,72,350 இருந்தது.தங்கம் 325 கிராம்,வெள்ளி 1225.509 கிராமும் இருந்தன.
கோயில் செயல் அலுவலர் ச.சீனிவாசன், கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர், கோயில் மணியக்காரர் சூரிய நாராயணன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்களை கோயில் பணியாளர்கள் திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

No comments
Thank you for your comments