Breaking News

மோரை ஊராட்சியில் 78 வது சுதந்திர தின விழாவினை ஊராட்சி மன்ற தலைவர் திவாகர் கொடியேற்றி துவக்கி வைத்தார்

 திருவள்ளூர் : 

மோரை ஊராட்சியில் 78 வது சுதந்திர தின  விழாவினை ஊராட்சி மன்ற தலைவர் திவாகர் கொடியேற்றி துவக்கி வைத்தார்



திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோரை ஊராட்சியில் 78 வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு  மோரை ஊராட்சி ஒன்றியத்தில் தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் வெற்றி பெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியும் சிறப்பித்தார். 

பின்னர் 12 மணி அளவில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் பல்வேறு சலுகைகள் குறித்தும் ஏழை எளிய மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துக் கூறினார் 

இவருடன் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் காவல்துறையினர் அரசு அதிகாரிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த விழாவினை சிறப்பித்தனர்

No comments

Thank you for your comments