மீனாட்சி மருத்துவக்கல்லூரியில் 78ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம்
78 ஆவது சுதந்திர தினம் இன்று மீனாட்சி மருத்துவ கல்லூரி விளையாட்டு திடலில் மிக சிறப்பாக கொண்டாடபட்டது.
மீனாட்சி மருத்துவக்கல்லூரி முதல்வர் திருமிகு பேராசிரியர் K. V. இராஜசேகர் அவர்கள் தம் வரவேற்பு உறையில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட INS இராஜாளி விமான படை கேந்திரத்தின் மருத்துவ சிறப்பு அதிகாரி லெப்டினன்ட் ஸ்வபனில் பாண்டே அவர்கள் தலைமையில் செயல்படும் ராணுவத்தினரின் நாட்டு மக்களின் பாதுகாப்பபை காக்கும் பொருட்டு பணியில் ஈடுபட்டுகொண்டிருக்கும் தன்னலமற்ற அரும் பணியினை நன்றியுடன் நினைவு கூர்ந்து வரவேற்றார்.
மேலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நீலகண்ட ன் மற்றும் அனைவரையும் வரவேற்றார் .
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணைவேந்தர் பேராசிரியர் திரு நீலகண்டன் அவர்கள் மருத்துவர்களின் அரும்பணியினை போற்றி பாராட்டினார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கி னார்.
தேசிய மாணவர் படையின் சார்பாக மருத்துவ மற்றும் செவிலிய மாணவர்கள் ,காவலர்கள் செவிலியர் மாண வர்கள் நடத்திய அணிவகுப்பு மரியாதையை தலைமை விருந்தினர் லெப்டினன்ட் டாக்டர் ஸ்வப்னில் பாண்டே அவர்கள் ஏற்றுக் கொண்டு தம் தலைமை உரையாற்றும் போது மருத்துவ பயிலும் மருத்துவ மாணவர்கள் திறன் மிக்கவர்கள் எனவும் பயிலும் போதும் படிப்புக்கு பின்னரும் ஏன் வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ அறிவையும் தொழில் நுட்ப அறிவையும் விருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
நாட்டின் வளர்ச்சிக்கு அவர்தம் சீரிய பணியால் நாட்டின் மக்களின் நலனை காக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மருத்துவரகள் ராணுவம் சார்ந்த பாதுகாப்பு பணியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொண்டார்.
பல்வேறு விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கபட்டனர்
மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் க. பூபதி துணை முதல்வர், பேராசிரியர் திருமதி. ஈஸ்வரி, நிலைய மருத்துவர் டாக்டர் இராதாகிருஷ்ணன், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மருத்துவ மாணவ மாணவியர்கள் செவிலியர்கள் , உடற்பயிற்சி சிகிச்சை மருத்துவரகள்.
மருத்துவமணை பணியாளர்கள் சிகிச்சை பெறவந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக உதவி முதல்வர் டாக்டர் ஈசுவரி நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments