Breaking News

காஞ்சிபுரத்தில் 191 பேருக்கு ரூ.4.12 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

காஞ்சிபுரம், ஆக.27:

காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மொத்தம் 191 பயனாளிகளுக்கு ரூ.4.12 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்,எம்பி க.செல்வம், எம்எல்ஏ எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க காஞ்சிபுரம்,வாலாஜாபாத்,ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியங்களுக்கு தலா ஒன்று வீதம் 3 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி ரூ.48 லட்சம் மதிப்பில் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 பேருக்கு ரூ.5.76 லட்சம் மதிப்பில் இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.28 ஆயிரம் மதிப்பில் விலையில்லாத மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், 15 பேருக்கு ரூ.1.09 லட்சம் மதிப்பில் தேய்ப்பு பெட்டிகள், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 115 பேருக்கு ரூ.402.50 லட்சம் மதிப்பில் கலைஞரின் கனவு இல்லத்துக்கான பணி உத்தரவு ஆணைகள் உட்பட மொத்தம் 191 பயனாளிகளுக்கு ரூ.4.12 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, ஒன்றியக்குழு தலைவர்கள் மலர்க்கொடி குமார், ஆர்.கே.தேவேந்திரன், எஸ்.டி.கருணாநிதி உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments