Breaking News

ரூ.1000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை - செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு

காஞ்சிபுரம், ஆக.29:

சென்னை பெருங்குடியில் சீனிவாசன் என்பவருக்கு மின்இணைப்பு வழங்குவதற்காக ரூ.1000 லஞ்சமாக பெற்ற மின்வாரிய உதவி பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.


சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் சீனிவாசன்.இவர் பாத்திரம் வாடகைக்கு விடும் நிறுவனம் நடத்தி வந்தார்.இவர் தனது வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக பெருங்குடி வடக்கு மின்வாரிய அலுவலக உதவி பொறியாளர் குணசேகரனை அணுகியுள்ளார்.

அவர் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையுடன் ரூ.1000 லஞ்சமாக வழங்குமாறு கேட்டதால் சீனிவாசன் சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிபில் கடந்த 22. 11.2013 ஆம் ஆண்டு புகார் செய்தார்.இப்புகாரின் பேரில் குணசேகரன் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு சார்பில் வழக்குரைஞர் கவிதா ஆஜரானார்.வழக்கை விசாரித்த முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ மின்வாரி உதவி பொறியாளர் குணசேகரனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்,ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

No comments

Thank you for your comments