நடிகை கவுதமியின் உதவியாளர் கைது - காஞ்சிபுரம் போலிஸார் விசாரணை
காஞ்சிபுரம், ஜூலை 16:
நிலமோசடி வழக்கில் நடிகை கவுதமியை ஏமாற்றியதாக அவர் கொடுத்த புகாரின் பேரில் அவரது உதவியாளரான அழகப்பன் என்பவரை செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
![]() |
படவிளக்கம் : அழகப்பன் |
ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள கோட்டையூரில் ரூ.1.07 கோடி மதிப்புள்ள நடிகை கவுதமியின் நிலத்தை கவனித்துக் கொள்வதாக பவர் அதிகாரம் பெற்று அதனை ரூ.60லட்சத்துக்கு மோசடியாக அவரது உதவியாளராக இருந்த அழகப்பன்(63) விற்பனை செய்திருந்தாராம்.இதே போல நடிகை கவுதமியின் சகோதரரான ஸ்ரீகாந்துக்கு சொந்தமான நிலத்தையும் ரூ.60லட்சத்துக்கு விற்பனை செய்து பின்னர் அதனை ஒரு கோடிக்கு அழகப்பன் விற்பனை செய்திருந்தார்.
இது தொடர்பாக நடிகை கவுதமியும்,சகோதரர் ஸ்ரீ காந்தும் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தனர்.புகாரின் பேரில் இவ்விரு வழக்குகள் தொடர்பான குற்றவாளிகளையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் போலீஸôர் சென்னை வேளச்சேரியில் காந்தி சாலையில் உள்ள குடியிருப்பில் உள்ள அவரது வீட்டிலிருந்த அழகப்பனை போலீஸôர் கைது செய்து காஞ்சிபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகை கவுதமி வழக்கு தொடர்பாக பலராமன் என்பவரையும், ஸ்ரீ காந்த் வழக்கு தொடர்பாக சுகுமார், ரகுநாதன் என்ற மேலும் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
No comments
Thank you for your comments