மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து காஞ்சிபுரம் வருவாய்த்துறையினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்:
- வெளி மாவட்டத்திலிருந்து வட்டாட்சியர்களை நியமிக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து காஞ்சிபுரம் வருவாய்த்துறையினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
- மாட்டத்திலேயே பணிபுரியும் துணை வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு அளித்து நிரப்பக்கோரியும்,12வருடங்களாக பணிபுரியும் அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளித்திடவும்,குளறுபடிகளை சரி செய்திடவும்,ஊழியர் நலனில் அக்கறை செலுத்திடவும், கோஷங்களை எழுப்பி கண்டனம்
வெளி மாவட்டத்திலிருந்து வட்டாட்சியர்களை நியமிக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் பங்கேற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டாட்சியர் காலிப்பணியிடங்களை இம்மாட்டத்திலேயே பணிபுரியும் துணை வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு அளித்து நிரப்பக்கோரியும், 12வருடங்களாக பணிபுரியும் அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளித்திடவும், தனித் துணை வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடவும், குளறுபடிகளை சரி செய்திடவும், ஊழியர் நலனில் அக்கறை செலுத்திடவும், கோஷங்களை எழுப்பினர்.
No comments
Thank you for your comments