Breaking News

மூதாட்டிக்காக கோரிக்கை மனு எழுதி கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய எம்எல்ஏ எழிலரசன்



  • மக்களுடன் முதல்வர் திட்டத்தில் முதியோர் உதவித்தொகை வாங்க காத்திருந்த மூதாட்டி இடம் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கையை கேட்டு மூதாடியுடன் தரையில் அமர்ந்து மனு எழுதி கொடுத்து அதிகாரிகளிடம் மனுவை அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்
  • மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 5 ஊராட்சியை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்



காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்புகுழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்புகுழி, மேல் ஒட்டிவாக்கம், மேல்கதீர்பூர், விஷார் மற்றும் நரப்பாக்கம் உள்ளிட்ட 5 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்தனர். 


குறிப்பாக புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு கட்டணம் மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம், கல்வி உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், முகவரி திருத்தம், வீட்டு வரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், புதுமைப் பெண் கல்வி உதவிதிட்டம், ஆதரவற்றோருக்கான உதவி தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 1000த்திற்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றன. இவற்றைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அதற்கான ரசீதுகளையும் மக்களுக்கு வழங்கி மனுக்களின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பார்வையிட்டு கொண்டிருந்த பொழுது அவ்வழியே விஷார் கிராமத்தில் லட்சுமி, சுசிலா, முனியம்மாள் ஆகிய மூன்று மூதாட்டிகள் அமர்ந்து மனு கூட எழுதாமல் காத்திருந்த நிலையில் அதை கண்ட சட்டமன்ற உறுப்பினர் மூதாட்டி இடம்  சென்று கேட்டபோது முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என மனு எழுத வந்ததாக கூறியதை தொடர்ந்து மூதாட்டியுடன் தரையில் அமர்ந்து சட்டமன்ற உறுப்பினர் மனு எழுதிக் கொடுத்து அதிகாரியிடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 


கிராமத்தில் இருந்து எழுதத் தெரியாத வரும் வயதான முதியவர்களுக்கு மனு எழுதி கொடுக்க ஒரு நபரை அமர்ந்து கோரி அதிகாரிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்தார்.

இதில் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments