காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர் கைது - ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனை செய்யும் இளைஞரை மதுவிலக்குப்பிரிவு காவல்துறையினர் புதிய ரயில் நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்திருப்பதுடன் அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
![]() |
பிரேம்குமார் |
காஞ்சிபுரம் ஐயங்கார்குளம் கற்பக விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(19) இவர் ஆந்திர மாநிலம் ஓ.ஜி.குப்பம் என்ற இடத்தில் கஞ்சாவை வாங்கிக் கொண்டு காஞ்சிபுரத்தில் விற்பதற்காக ரயிலில் வந்து கொண்டிருப்பதாக மதுவிலக்குப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில் அரக்கோணம் பகுதியிலிருந்து வந்த ரயிலிலிருந்து புதிய ரயில் நிலைய வளாகத்தில் இறங்கிய போது மதுவிலக்குப்பிரிவு காவல்துறையினரால் பிரேம்குமார் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.சம்பவம் தொடர்பாக மதுவிலக்குப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகவடிவு ,சார்பு ஆய்வாளர் சந்திர சேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments