காஞ்சிபுரத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா - பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்
படவிளக்கம்: காமராஜர் பிறந்த நாளையொட்டி முளைப்பாரி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்த பெண்கள்
காஞ்சிபுரம், ஜூலை 15:
காஞ்சிபுரத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி நாடார்கள் கூட்டமைப்பு சார்பில் திங்கள்கிழமை ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
கல்வித்தந்தை எனப் போற்றப்படக்கூடிய காமராஜரின் 122 வது பிறந்த நாள் விழா காஞ்சிபுரம் மாவட்ட நாடார்கள் கூட்டமைப்பு சார்பில் 3வது ஆண்டாக கொண்டாடப்பட்டது.கூட்டமைப்பின் தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் வேலுமணி,பொருளாளர் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் காந்தி சாலையில் உள்ள காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள பரஞ்ஜோதி அம்மன் ஆலயத்திலிருந்து ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்துக் கொண்டும்,சிலர் பால்க்குடம் எடுத்துக்கொண்டும் ஊர்வலமாக வந்தனர்.
ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து காஞ்சிபுரம் வட்டார ஐக்கிய நாடார் சங்க கட்டிடத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு பாலாபிஷேகமும் செய்தனர்.
இந்நிகழ்வில் கௌரவத்தலைவர்கள் வெள்ளைச்சாமி,ராஜகோபால், குமார் ஆகியோர் உட்பட கூட்டமைப்பின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments