காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
படவிளக்கம்: கல்லூரியின் முன்னாள் மாணவருக்கு நினைவுப்பரிசு வழங்கும் முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன்
காஞ்சிபுரம், ஜூலை 21:
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்து அக்கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்வி நிதியை கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசனிடம் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கல்லூரியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை பட்டப்படிப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரியில் பயின்று அமெரிக்கா,கனடா மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சந்தித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அம்மாணவர்கள் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவிடும் வகையில் கல்வி நிதியையும் கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசனிடம் வழங்கினார்கள்.
கல்லூரியின் சார்பில் மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
No comments
Thank you for your comments