Breaking News

விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ முதல் சிங்கிள் நாளை வெளியீடு

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தின் முதல் சிங்கிளான ‘மினிக்கி மினிக்கி’ நாளை (ஜூலை 17) வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ‘தங்கலான்’. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 


ஞானவேல் ராஜா படத்தை தயாரித்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படத்தை சுதந்திர தினத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான ஒவ்வொரு அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி வரும் புதன்கிழமை படத்தின் முதல் சிங்கிளான ‘மினிக்கி மினிக்கி’ பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புரொமோ வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பாடலில் விக்ரம் - பார்வதியின் நடனம் ஈர்க்கிறது.


No comments

Thank you for your comments