Breaking News

மக்கள் பொதுநல சங்கம் முப்பெரும் விழா

கோவை அண்ணா சிலை அருகில் உள்ள தனியார் கூட்டரங்கில் மக்கள் பொதுநல சங்கம் முப்பெரும் விழா மற்றும் நான்காம் ஆண்டு துவக்க விழா மக்கள் பொது நல சங்கம் அனைத்து நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது. 

இந்த விழாவில் பந்தய சாலை காவல் ஆய்வாளர் அர்ஜுன் குமார்,போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிழக்கு பாண்டியராஜன், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமை இடத்து மருத்துவர் சரவண பிரியா,  வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஓய்வு பாஸ்கரன்,லயன் செந்தில் குமார், பிற்பகல் பத்திரிகை ஆசிரியர் ஆடம் அப்பாதுரை, சூரியன் எப்எம் டைசன், சைன் மேக்கர்ஸ் ஃபைசல் அகமது, பிரசன்ன விதக்த்தன் பிரசன்ன மணிகண்டன் நிழல் மையம் முருகன் கோவை மக்கள் பொது நல சங்கத்தின் கெளரவ ஆலோசகர் கனகராஜ்,பால் ராசு  நிறுவனர் தாய்த் தமிழ் அகாடமி  கோவை மக்கள் பொது நல சங்க செயலாளர் பிரகாஷ் கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.


மேலும்  சிறந்த சமூக சேவகர் மற்றும் இளம் தொழிலதிபர்கள் சிறந்த சாதனையாளர்கள் சிறந்த காவலர்கள் சிறந்த பத்திரிகையாளர்கள் விருதுகள்  வழங்கி கெளரவித்தனர். மேலும் 50கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்கள்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மக்கள் நல பொதுநல சங்கத்தின் நிர்வாகிகள் ஆனந்தகுமார் பாலாஜி தனபால் நவீன் ஜோதி குமார் செந்தில்குமார் கிருஷ்ணகுமார் கண்ணன் ரஞ்சித் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் சமூக ஆர்வலர்கள் காவலர்கள் தொழிலதிபர்கள் மாணவ மாணவியர் கள் பெற்றோர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் மக்கள் நண்பன் ஆனந்த் நன்றி தெரிவித்தார்.

No comments

Thank you for your comments