Breaking News

"விடாமுயற்சி" படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

"விடாமுயற்சி" படத்தின்  செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.  இதில் ஒரு போஸ்டரில் கார் சேசிங் காட்சி அமைந்துள்ளது.  மற்றொரு போஸ்டரில் அஜித் கையில் பெரிய ஷாட்கன்னுடன் நெஞ்சில் கைவைத்தப்படி நிற்கிறார்.   போஸ்டரில் எஃபர்ட் நெவர் ஃபையில்(EFFORTS NEVER FAIL) என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. 

62 - வது ஆக்ஷன் படம்

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.   அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.




இப்படம் திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. 

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இப்படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், திடீரென்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

மேலும் விடாமுயற்சி படத்தில் எஞ்சியுள்ள படப்பிடிப்பை நிறைவு செய்ய படக்குழு அஜர்பைஜான் செல்லவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கியது. 

 'டூப்' இல்லாமல் துணிச்சலான நடிப்பு

இந்த படத்தில் அஜித்குமார் 'டூப்' இல்லாமல் துணிச்சலாக நடித்து இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது.

வீடியோ வைரல்

இப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படும் வீடியோவை அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், அஜித்தும், ஆரவ்வும் காரில் அமர்ந்திருந்தவாறு இருக்கின்றனர். அந்தக் காரை அந்தரத்தில் தொங்கவிட்டுச் சுழற்றியவாறு படப்பிடிப்பு நடக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்  

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் முதல் போஸ்டரை (first look) படத் தயாரிப்பு நிறுவனம் கடந்த வாரம் 30.06.2024ம் தேதி வெளியிட்டது. 

அதன்படி வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டரில் ‘அவர் பாதையில் (ON HIS PATH)’ எனக் குறிப்பிட்டு தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் வெளியிடப்பட்டுள்ளன. 


கடந்த ஆண்டு மே 1 ஆம் தேதி அஜித் குமாரின் பிறந்த நாளையொட்டி விடாமுயற்சி படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஒரு ஆண்டுக்குப் பிறகு தற்போது விடாமுயற்சி படத்தின் முதல் போஸ்டரை படக்குழு கடந்த வாரம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

செகண்ட் லுக் போஸ்டர் 

அதைத்தொடர்ந்துபடத்தின் 2 படங்களுடன் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.  இதில் ஒரு போஸ்டரில் கார் சேசிங் காட்சி அமைந்துள்ளது.  மற்றொரு போஸ்டரில் அஜித் கையில் பெரிய ஷாட்கன்னுடன் நெஞ்சில் கைவைத்தப்படி நிற்கிறார். 

போஸ்டரில் எஃபர்ட் நெவர் ஃபையில்(EFFORTS NEVER FAIL) என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. 

1-ம் எண்ணை கடைப்பிடிக்கும் படக்குழுவினர் 

பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் முன் ஒருநாள் முன்னதாக  Tomorrow, Sunday 7️⃣:0️⃣3️⃣ PM 🕖  எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். 

அதே போன்று செகண்ட் லுக் போஸ்டர்  வெளியிடும் முன் இன்று மாலை 6.15 மணிக்கு  08:02  PM - 2 Looks 💥#EffortsNeverFail என்ற ஹேஷ்டேக் உடன்  பதிவிட்டனர். 

இந்த இரண்டு போஸ்ட்டர் வெளியிட்ட   நேரத்தின் கூட்டு எண் 1 என்ற அடிப்படையில் வெளியிட்டு அஜித்தின் பிறந்த தேதியை முன்னிறுத்தி உள்ளனர் படக்குழுவினர் என்பது தெள்ள  தெளிவாக தெரிகிறது. 

 கடந்த ஆண்டு மே 1 ஆம் தேதி அஜித் குமாரின் பிறந்த நாளையொட்டி விடாமுயற்சி படம் குறித்த அறிவிப்பு வெளியாகியது.  இதனை தொடர்ந்து 1 எண்ணை பின்பற்றி வருகின்றனர் படகுழுவினர்... 

கண்டிப்பாக படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  


செகண்ட் லுக் போஸ்டர் 

 

செகண்ட் லுக் அறிவிப்பு


பர்ஸ்ட் லுக்   போஸ்டர்   


 பர்ஸ்ட் லுக்  அறிவிப்பு

No comments

Thank you for your comments