கோவை டாக்டர்.ஆர்.வி.கல்லூரியில் கைத்தறி ஆடை அலங்கார ஃபேஷன் ஷோ
கோவை :
கோவை மாவட்டம், காரமடை, டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் வருகின்ற ஆகஸ்ட் -7 தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு உள்தர மதிப்பீட்டு அமைப்பு, நுண்கலை மன்றம் மற்றும் கோவை மக்கள் சேவை மையத்தின் சார்பில் கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர். சி.என்.ரூபா தலைமையேற்று தலைமை உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் கைத்தறி ஆடை அணிந்து வந்து தமிழ்நாடு, பெங்காலி மராத்தி, பஞ்சாபி, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத்தில் வாழும் மக்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் வகையில் கைத்தறி ஆடை அணிந்து வந்து அணி வகுப்பு நடத்தினர்.
கோவை, டிரீம் ஜோன் மற்றும் மேட்டுப்பாளையம் மக்கள் சேவை மையத்தைச் சேர்ந்த திவாகர், காயத்ரி மற்றும் அதன் உறுப்பினர்கள் பங்கேற்று முதலிடம் பெற்ற மாணவ, மாணவியைத் தேர்வு செய்து பரிசுகள் வழங்கினர்.
இந்நிகழ்வு அனைவருக்கும் கைத்தறி ஆடையை அணிவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
No comments
Thank you for your comments