ஜூலை 18ல் - மாற்றுத்திறனாளிகள் இலவச பயணச்சலுகை (Free Bus Pass) பெற்றிட சிறப்பு முகாம்.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளில் கல்வி பயில்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்பவர்களுக்கு இலவச பயணச்சலுகை (Free Bus Pass) பெற்றிட சிறப்பு முகாம் (சென்னை மாநகர பேருந்து (MTC) பயண அட்டை தவிர்த்து) நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது,
மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் இலவச பயணச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது. (சென்னை மாநகர பேருந்து (MTC) பயண அட்டை தவிர்த்து) காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளில் கல்வி பயில்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சையின் பொருட்டு விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட இடங்களுக்கு செல்பவர்களுக்கு இலவச பயணச்சலுகை (Free Bus Pass) பெற்றிட 18.07.2024 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சிறப்பு முகாம் மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
மேலே குறிப்பிட்ட நாளன்று மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை (அனைத்து பக்கங்களும்), உணவுப்பொருள் வழங்கல் அட்டை (ரேஷன் கார்டு), ஆதார் அட்டை மற்றும் கல்வி பயில்பவர்கள் கல்வி நிறுவனத்தில் பெறப்பட்ட சான்று அல்லது பணிக்கு செல்பவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் பெறப்பட்ட சான்று அல்லது மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்பவர்களுக்கு மருத்துவரிடம் பெறப்பட்ட சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் 2 நகல்களுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 ஆகியவற்றுடன் காஞ்சிபுரம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் (மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில்) நேரில் வந்து விண்ணப்பித்து பயனடையுமாறும்,
மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் :044-29998040-ல் தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments