ஆவடி பகுதியில் 114 நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு
ஆவடி காவல் ஆணையராகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் வழக்கு உள்ள 114 நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணை ரகத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குற்றம் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையர் கி.சங்கர் உத்தரவிட்டதன் அடிப்படையில் தொடர்ந்து இந்த பகுதிகளில் அட்டூழியம் செய்து வந்த ரவுடிகள் 68 நபர்கள் மீதும் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 15 நபர்களும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக 24 பேர் மற்றும் இணையதள குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 நபர்கள் மீதும் கள்ள சந்தை வழக்கு உள்ள 4 பேரும் இந்தப் பகுதியில் ஈடுபட்டு வந்த மொத்தம் 114 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் உத்தரவிட்டு உள்ளார்
இம்மாதத்தில் குறிப்பாக ஜூலை மாதத்தில் மட்டும் காவல் ஆணையர் அலுவலகத்திற்க்கு உட்பட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 18 நபர்கள் மீது குண்டர் தரப்பு சட்டத்தின் நடவடிக்கை மேற்கொண்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments