Breaking News

பெற்றோர் முன்பாக மகன் கொலை - மர்மக்கும்பல் வெறிச் செயல்

காஞ்சிபுரம்,  ஜூன் 13:

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் வியாழக்கிழமை பெற்றோர் கண் முன்பாகவே மகனை ஒரு மர்மக் கும்பல் கொலை செய்து விட்டு மற்றொரு இளைஞரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கி விட்டு தலைமறைவாகியுள்ளது.


சின்னையன் என்ற உதயநிதி

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் காலணி பகுதியை சேர்ந்த கோதண்டம்,சரிதா தம்பதியரின் மகன் சின்னையன் என்ற உதயநிதி(20)பிஎஸ்சி பட்டப்படிப்பை முடித்த இவர் கோவிந்தவாடி அகரம் கிராமத்தினருகேயுள்ள சிறுவாக்கத்தில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

சம்பவ நாளன்று இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டுக்குள் நுழைந்து பெற்றோர் கண் முன்பாகவே பல இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்தது. 

பின்னர் அந்த மர்மக்கும்பல் அங்கிருந்து அருகில் உள்ள படுநெல்லி கிராமத்தில் வசித்து வரும் சின்னையனின் நண்பரான கிரி(22)என்ற இளைஞரை அவரது வீட்டுக்கு சென்று அரிவாளால் பல இடங்களில் தாக்கி விட்டு தலைமறைவாகி விட்டது.

படுகாயம் அடைந்த கிரி கவலைக்கிடமான நிலையில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கிகிச்சை பெற்று வருகிறார்.

காஞ்சிபுரத்தில் அண்மையில் நடைபெற்ற மயானக்கொள்ளை திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பான முன்விரோதத்தில் மர்மக்கும்பல் சின்னையனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸôர் விசாரணை செய்து வருகின்றனர்.

குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சின்னையன் கொலை தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸாரும்,கிரியை தொக்கியது தொடர்பாக பாலுசெட்டி சத்திரம் போலீஸôரும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

No comments

Thank you for your comments