தொடர் இரத்ததான சேவை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு காஞ்சி மாவட்ட ஆட்சியர் விருது
36 தொடர் இரத்ததான முகாம்கள் மற்றும் கடந்த ஓராண்டில் மட்டும் 1480 யூனிட்கள் அவசர இரத்ததான சேவையை பாராட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் கிளை நிர்வாகிகளை அழைத்து
தமிழக அரசின் சார்பாக காஞ்சி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்கள் 13 நபர்களுக்கு விருதுகள் வழங்கினார்.
இதில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக காஞ்சிபுரம் தலைமை அரசு பொது மருத்துவமனையை மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும்.
நடமாடும் இரத்த வங்கி வாகன சேவையை துவக்க வேண்டும்.
கஞ்சா,புகையிலை,பான் மசாலா,மது ஆகியவற்றின் விற்பனையை கட்டுபடுத்த வேண்டும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்..
மேலும் காஞ்சி மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சர்புதீன், மாவட்ட துணை செயலாளர் அன்சாரி, காஞ்சிபுரம் கிளை தலைவர் சாகுல் அமீத், செயலாளர் யூசூஃப், பொருளாளர் பாசில், மருத்துவரணி இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்..
No comments
Thank you for your comments