வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் : மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளையும் இன்று (25.06.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
காஞ்சிபுரத்தில் நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை-கன்னியாகுமரி தொழில்தட திட்ட பணிகளான, மிலிட்டரி சாலையில் செவிலிமேடு முதல் ஓரிக்கை சந்திப்பு வரையில் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளையும், ஓரிக்கை சாலை சந்திப்பு, அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றுவரும் மேம்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, உத்திரமேரூர் சாலையில் ஆசிரியர் காலனி அருகில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு, இரயில்வே சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் கட்டும் பணியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
இவ் ஆய்வின் போது கோட்டப்பொறியாளர் கே.ஹேமலதா, உதவி கோட்டப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) பெரியண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments