Breaking News

காஞ்சிபுரத்தில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் : 

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.


குற்றவியல் நடைமுறைச் சட்டங்களில் பெயர் மாற்றத்தை திரும்பப் பெறக் கோருதல்,வழக்குரைஞர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வலியுறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், உத்தரமேரூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த வழக்குரைஞர்கள் சங்க தலைவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞர்கள் எல்.கண்ணன், சிவகோபு, திருப்பதி, முரளிகிருஷ்ணா ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கையில் கோரிக்கைகளை தெரிவிக்கும் பதாகைகைளை ஏந்தியவாறு வழக்குரைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments