Breaking News

வேலூர் மாநகராட்சி கூடாரம் காலி - பணி தேக்கமடையும் அவலம்... பொதுமக்கள் அச்சம்

  வேலூர்: 

வேலூர் மாநகராட்சி  ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும்  பெரு நகரமாக விளங்குகிறது. இந்நிலையில், வேலூர் மாநகராட்சியில்  உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் மற்றும் நிர்மலா தேவி பணியிடமாற்றம் செய்யபட்டுள்ளனர்.  மேலும், அந்த இடத்திற்கு மாற்று அதிகாரிகளை  அறிவிக்கவில்லை. பல்வேறு பணிகள் தேக்கநிலையில் உள்ள நிலையில், இந்த பணி இடமாற்றத்தால் மேலும் பணிகள் தேக்க நிலையை அடையும் என்ற ஐயம் எழுந்துள்ளது. 

வேலூர் நகரம், முதல் இந்திய சுதந்திர போராட்டத்தின் வித்தாக கருதப்படும். வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சியின் வீரத்தை பறைசாற்றும் வரலாற்றை கொண்டது. இந்தியாவில் அகழியுடன் கூடிய ராணுவ ரீதியாக கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்த கோட்டை என்ற பெருமை கொண்டது. புகழ்பெற்ற வேலூர் சிஎம்சி, விஐடி பல்கலைக்கழகம், பொற்கோயிலால் நகரம் பெருமை அடைகிறது.

வேலூர் நகராட்சி 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1947-ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1979-ல் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2008-ம் ஆண்டு 40 வார்டுகள் கொண்ட நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.  

தொடர்ந்து மாநகர எல்லை விரிவாக்கத்தில் தாராபடவேடு, சத்துவாச்சாரி நகராட்சிகளுடன் அல்லாபுரம், தொரப்பாடி, சேண்பாக்கம் பேரூராட்சிகள் மற்றும் அருகில் உள்ள கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. வேலூர் மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 60 வார்டுகளை கொண்டுள்ளது. வேலூர் மாநராட்சி நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது.  

அண்டை மாநிலத்தவர்கள் வந்து செல்லும் சுற்றாலா தலாமாக விளங்குகிறது.  வரலாற்றுச் சிறப்பு மிக்க  ஜலகண்டேசுவரர் ஆலயம், ஸ்ரீபுரம் பொற்கோயில் வருவோர்கள், திருப்பதி செல்பவர்களும் வேலூரையும்   அதைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களக்கு வந்து செல்வோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.  

இதனால்  வேலூர் மாநகராட்சி வேகமாக வளரும் பெரு நகராமாக உள்ளது.  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 11 நகரங்களில் வேலூர் மாநகராட்சியும் ஒன்று.  ஸ்மார்ட்சி திட்ட பணிகள் ஏற்கனவே மந்தமாக  உள்ளது. இன்றளவும் முழுமையாக நிறைவு பெறவில்லை. பணி இடங்கள் முழுமையாக நிரப்பப்படாததால்  ஏற்கனவே பல திட்டப்பணிகள் தேக்க நிலையில் உள்ளது.  

அதுமட்டுமின்றி, வேலூர் மாநகராட்சியில் அனுமதியற்ற மற்றும் விதிகளை மீறிய ஒழுங்கற்ற கட்டிடங்கள், ஹோர்டிங்ஸ் பலகைகள்  அதிகரித்த வண்ணம் உள்ளன.   

இந்த நிலையில்,  வேலூர் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் வெங்கடேசன், மற்றும் நிர்மலா தேவி பணியிடமாற்றம் செய்யபட்டுள்ளனர். மேலும், அந்த இடத்தில் மாற்று அதிகாரிகள் அறிவிக்கிவில்லை.  இதனால் மேலும் பணிகள் தேக்க நிலை அடையும் என்ற ஐயம் எழுந்துள்ளது. 

தற்போது வேலூர் மாநகட்சியில்,  நகர திட்டமிடல் மற்றும் கட்டிட ஆய்வாளர்கள் பணியில் பொறியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  

நகர திட்டுமிடுநர் மற்றும் கட்டிட ஆய்வாளர் என இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். ஏழு பேர் செயலாற்றவேண்டிய இடத்தில் இரண்டு பேர் செயலாற்றும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வேலூர் மாநகராட்சி பணி மேலும் தேக்கமடையும், பணி சுமை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை..  

ஏற்கனவே கட்டிட அனுமதி பெற முடியாமல் தேக்க நிலையில்  உள்ளது என பொதுமக்கள் அவதியுறுகின்றனர். 

இந்த நிலையில்  மாற்று அலுவலர்கள் அறிவிக்கும் வரை இடமாற்றம் செய்தவர்களை விடுக்காமல் பணியில் தொடர செய்து பின்பு விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது.  



 


 

No comments

Thank you for your comments