Breaking News

நாளைய (28-06-2024) ராசி பலன்கள்




மேஷம் : 

தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் ஏற்படும். சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளின் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.  

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

அஸ்வினி : அனுசரித்து செல்லவும். 

பரணி : வரவுகள் உண்டாகும்.

கிருத்திகை : சோர்வான நாள்.




ரிஷபம்

காப்பீடு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பெருமை நிறைந்த நாள். 

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.

கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும். 

ரோகிணி : ஆர்வம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : சேமிப்பு அதிகரிக்கும்.


மிதுனம்

மருத்துவத் துறைகளில் சாதகமான சூழல் அமையும். தொழில் நிமித்தமாக மறைமுக விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பணி நிமிர்த்தமான பயணங்கள் மேம்படும். மனதளவில் இருந்த அமைதியின்மை குறையும். தன வரவுகளை மேம்படுத்துவதற்கான சூழல்கள் அமையும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். புதுவிதமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சந்தோஷம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

திருவாதிரை : பயணங்கள் மேம்படும். 

புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


 

கடகம்

இறை சார்ந்த பணிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும். வியாபார அபிவிருத்தி விஷயங்களில் பொறுமையை கையாளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான வெளியூர் தொடர்புகள் அதிகரிக்கும். உற்சாகம் நிறைந்த நாள். 

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : தேடல்கள் பிறக்கும்.

பூசம் : அறிமுகங்கள் கிடைக்கும். 

ஆயில்யம் : தொடர்புகள் அதிகரிக்கும்.



சிம்மம்

புதுமையான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். தொழிலில் அலைச்சல்கள் உண்டாகும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். கடன் விஷயங்களில் இருந்த இழுபறிகள் மறையும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். விரயம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

மகம் : சிந்தித்து முடிவெடுக்கவும்.

பூரம் : அலைச்சல்கள் உண்டாகும். 

உத்திரம் : புரிதல்கள் ஏற்படும்.



கன்னி

புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். ஆவணத்துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். அதிர்ஷ்டகமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.  

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

அஸ்தம் : நெருக்கம் அதிகரிக்கும். 

சித்திரை : மாற்றம் ஏற்படும்.



துலாம்

சிறு தூர பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த சஞ்சலம் மறையும். நேசம் பிறக்கும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் :  இளம் சிவப்பு

சித்திரை : ஆதாயகாரமான நாள்.

சுவாதி : பிரச்சனைகள் குறையும். 

விசாகம் : சஞ்சலம் மறையும்.


விருச்சிகம்

உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பாசம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விசாகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

அனுஷம் : நுட்பங்களை அறிவீர்கள்.

கேட்டை : மகிழ்ச்சியான நாள்.



தனுசு

இடம் மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். எதிர்பாராத கடன் உதவிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். அனுகூலம் நிறைந்த நாள்.  

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மூலம் : புரிதல் ஏற்படும்.

பூராடம் : வேறுபாடுகள் மறையும். 

உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.



மகரம்

வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சோர்வு விலகும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : நீலம்

உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

திருவோணம் : பிரச்சனைகள் குறையும். 

அவிட்டம் : ஆதரவான நாள்.



கும்பம்

சமூகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். வீடு மாற்றம் சார்ந்த முயற்சிகள் சாதகமாகும். திடீர் பயணங்கள் மூலம் அனுபவம் அதிகரிக்கும். பேச்சுகளுக்கு மதிப்புகள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்து சோர்வுகள் குறையும். பக்தி நிறைந்த நாள்.  

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் நிறம்

அவிட்டம் : சாதகமான நாள்.

சதயம் : அனுபவம் அதிகரிக்கும். 

பூரட்டாதி : சோர்வுகள் குறையும். 




மீனம்

தொழில் வட்டாரத்தில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். சிறு தூர பயணங்கள் மூலம் மாற்றமான சூழல்கள் அமையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒன்று இரண்டு முறை படிப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

பூரட்டாதி : கவனம் வேண்டும். 

உத்திரட்டாதி : மாற்றமான நாள்.

ரேவதி : சேமிப்புகள் குறையும். 


No comments

Thank you for your comments