சென்னையில் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையம்-காஞ்சி காமகோடி பீடம் தொடங்குகிறது
காஞ்சிபுரம், ஏப்.22:
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
காஞ்சி காமகோடி பீடத்தின் சார்பில் சென்னையில் உள்ள பி.எஸ்.கல்வி நிறுவனம் மூலமாக இலவச ஐஏஎஸ் பயிற்சி மையம் நிகழ் மாதம் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கப்படவுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளில் மாணவர்களை உருவாக்கிடவும் புண்ணிய ஆத்மா, புண்ணிய அதிகாரி,புண்ணிய தலைவர் என்ற உயர்ந்த குறிக்கோள்களுடன் செயல்படுத்திட திட்டமிட்டுள்ளோம். இதற்கென தனியாக ஸ்ரீகாஞ்சி மகா சுவாமி அகாதமி சிவில் சர்வீசஸ் என்ற பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
அனுபவமும், திறமையும் உள்ள பல பேராசிரியர்கள் இந்த இலவசப்பயிற்சியை அளிக்க இருப்பதால் விருப்பம் உள்ள மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு 98400 50586 அல்லது 98408 33575 என்ற கைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும் ந.சுந்தரேச ஐயர் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments