Breaking News

வெளியானது ரஜினி - 171 டீசர்: படத் தலைப்பு அறிவிப்பு!

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.



மேலும், இப்படத்தில் நாகார்ஜுனா, ரன்வீர் சிங், சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. 

32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் நடிகை ஷோபனா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில், ரஜினியின் 171-வது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில், படத்தின் பெயர் 'கூலி' என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ரஜினிக்கு வில்லனாக நடிகர் மைக் மோகன் நடிக்கவுள்ளதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.



No comments

Thank you for your comments