Breaking News

அஞ்சல் வாக்கு அளிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (01.04.2024) பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாக்குச்சாவடிக்கு வர இயலாதவர்கள் அஞ்சல் வாக்கு அளிப்பது குறித்து உதவி தேர்தல் அலுவலர்களுடனான  ஆலோசனைக்  கூட்டம்  மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


நடைபெறுகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு எண். 06, காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, செய்யூர், திருப்போரூர் மற்றும் மதுராந்தகம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில்  உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு  எண் 6 காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்கள் (Absentees Voters) அதாவது 85 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் நடமாடும் குழுக்கள் (Mobile Team) அமைத்தல், வாக்கு சாவடி நிலை அலுவலர் மூலம், சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு எந்த தேதியில் எப்பொழுது வாக்கு பெறப்படும் என்ற தகவல் தெரிவித்தல் மற்றும் நடமாடும் குழுக்கள்(Mobile Team) மூலம் வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிப்பது என்ற விளக்கத்தை அளித்து அவர்களிடம் வாக்குகள் பெறுதல் மற்றும் தேர்தல பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அஞ்சல் வாக்கு அளித்தல் மற்றும் தேர்தல் பணிச்சான்று ஆகியவை அளித்தல் தொடர்பாக  ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இவ் ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், சிப்காட் சிறப்பு மாவட்ட அலுவலர் (நில எடுப்பு) திரு.காளிதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.


No comments

Thank you for your comments