Breaking News

100% வாக்களிக்க வேண்டும் - விழிப்புணர்வு

 2024-ம் ஆண்டு எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதற்காக (SVEEP-Systematic Voters Education and Electoral Participation) பொதுமக்களிடையே விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில், முந்தைய  தேர்தல்களில் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ள பகுதிகளில் 11.03.2024 முதல் தொகுதி மற்றும் வாக்குச்சாவடி வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு 100% வாக்களிப்போம் என தேர்தல் உறுதிமொழி எடுத்தல், பேனர்கள், போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வைத்து பிரச்சாரம் செய்தல், பள்ளி மாணவர்களுக்கு கலாச்சார போட்டிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கல்லூரி மாணவர்களை ஒன்று திரட்டி தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்துதல், அரசு களப்பணியாளர்களை கொண்டு பொதுமக்களின் வீட்டிற்கே சென்று துண்டு பிரசுரங்கள் வழங்குதல், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உறுதிமொழி எடுத்தல், மாற்றுதிறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று வாக்குபதிவு செய்துவது குறித்து விழிப்புணர்வு அளித்தல், சுயஉதவிகுழுக்களை கொண்டு மாவட்ட அளவில் ரங்கோலி போட்டிகள் நடத்துதல் மனித சங்கலி, பைக் பேரணி போண்ற விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அதன்படி, இன்று குன்றத்தூர் நகராட்சி சார்பில், பேருந்து நிலையத்தில், வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தல்  விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரங்கோலி கோலமிட்டு, தேர்தல்  விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.  

மேலும் சமூக நலத்துறை சார்பில், திருநங்கைகள் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரங்கோலி கோலமிட்டு, தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ/மாணவியர்கள்  தேர்தல்  விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

வெளியீடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments