தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குழு எறிபந்துப்போட்டி - காஞ்சிபுரத்தை சேர்ந்தவருக்கு தங்கம்
காஞ்சிபுரம் :
தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குழு எறிபந்துப் போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த விளையாட்டு வீராங்கனை தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
படவிளக்கம் : தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழுடன் காஞ்சிபுரத்தை சேர்ந்த விளையாட்டு வீராங்கனை கிளாரா பீட்டர்
காஞ்சிபுரம் மாவட்டம் எழிச்சூர் அருகே மதுவந்தாங்கல் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிளாரா பீட்டர்(40) இவர் கடந்த 29.3.24 ஆம் தேதி காட்மாண்டுவில் நடைபெற்ற தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்குரிய குழு எறிபந்துப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.இவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை புதன்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இது குறித்து கிளாரா பீட்டர் கூறுகையில்...
நேபாளம், இந்தியா பாரா துரோபால் விளையாட்டு சங்கம் சார்பில் நேபாள மாநிலம் காட்மாண்டுவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குழு எறிபந்துப்போட்டியில் தமிழகத்திலிருந்து மதுரை, ஈரோடு, காஞ்சிபுரம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் 7 பேர் ஒரு குழுவாக பங்கேற்றோம். இந்தியாவும், தாய்லாந்தும் மோதியதில் இந்திய அணி வெற்றி பெற்றது.7 பேரும் தேசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்றோம்.
இதில் காஞ்சிபுரத்திலிருந்து நான் தங்கப்பதக்கம் பெற்றிருந்தேன். எனது சான்றிதழையும், தங்கப் பதக்கத்தையும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து காண்பித்து வாழ்த்துப் பெற்றேன் என்றார்.
No comments
Thank you for your comments