Breaking News

வாக்குச்சாவடி நிலைய அலுவலகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலர் பணிக்கான இரண்டாவது சீரற்றமயமாக்கலை (Second Supplementary Randomization)  பொதுத் தேர்தல் பார்வையாளர் திரு.புபேந்திர எஸ்.சௌத்திரி, இ.ஆ.ப., மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ,ஆ.ப., ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.


 நடைபெறுகின்ற பாராளுமன்ற பொது தேர்தல் 2024-னை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட  ஆலந்தூர், திருப்பெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில்  பணிபுரிய உள்ள பணியாளர்களுக்கு இரண்டாம் கட்ட சீரற்றமயமாக்கல் (Randomization)  இன்று 02.04.2024 மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் எண் 6 காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கான பொது பார்வையாளர் திரு.புபேந்திரஎஸ்.சௌத்திரி இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ்/  நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) காஞ்சிபுரம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) காஞ்சிபுரம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.           

No comments

Thank you for your comments