Breaking News

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் ஓவியங்கலை வரைந்த மாணவர்கள்

காஞ்சிபுரம்,ஏப்.28-

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே களியாம்பூண்டி கிராமத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் பயிலும் 29 மாணவ, மாணவியர்கள் கைலாசநாதர் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்பட்டு அக்கோயில் சிற்பங்களை ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தினர்.

படவிளக்கம்: வரைந்த ஓவியங்களை கைலாசாநாதர் கோயில் முன்பாக பொதுமக்களிடம் காண்பித்த சைல்ட் ஹெவன் இண்டர் நேஷனல் நிறுவனத்தில் பயிலும்  மாணவ, மாணவியர்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களியாம்பூண்டி கிராமத்தில் சைல்ட்ஹெவன் இண்டர் நேஷனல் என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இச்சிறுவர் இல்லத்தில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கிப்படித்து வருகின்றனர்.கோடைகாலத்தில் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஓவியத்தின் மீது ஆர்வமுள்ள மாணவ,மாணவியர்களை காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலுக்கு அழைத்து வந்தனர். கலைநுட்பம் நிறைந்த அச்சிலைகளை மாணவர்கள் பார்வையிட்டனர்.

மாணவர்கள் பார்வையிட்ட சிற்பங்களில் தங்களால் முடிந்த சில சிற்பங்களை ஓவியங்களாக வரையுமாறு சிறுவர் இல்ல நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதையடுத்து மாணவ,மாணவியர் ஒவ்வொருவரும் ஒரு சிற்பத்தை தேர்வு செய்து ஓவியமாக வரைந்தனர்.

பின்னர் அவர்கள் வரைந்த ஓவியங்களை பொதுமக்கள் பார்வைக்கும் காட்சிப்படுத்தினார்கள்.இது குறித்து ஓவியம் வரைந்த மாணவி ஒருவர் கூறுகையில் கோடைகாலத்தை பயனுள்ளதாக ஆக்கும் வகையில் ஒரே சிந்தனையுடன் இச்சிற்பங்களை கண்டு ரசித்ததோடு வரைந்தும் மகிழ்ச்சியடைந்தோம்.ஓவியமும்,தியானம் செய்வதும் ஒன்று என்றும் உணர முடிந்தது என்றார்.

ஏற்பாடுகளை சைல்ட் ஹெவன் இண்டர்நேஷனல் அமைப்பின் நிர்வாகி சீனி,மேலாளர் சரோஜினிதேவி, ஓவிய ஆசிரியர் விக்ரம் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.11 ஆண்கள்,18 பெண்கள் உட்பட மொத்தம் 29 பேர் ஓவியம் வரைந்து பொதுமக்களிடம் காட்சிப்படுத்தினார்கள்.


No comments

Thank you for your comments