தமிழகத்தில் 69.72% வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு
சென்னை:
நாட்டின் 18-வது மக்களவைக்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் (ஏப்.19) அமைதியாக நடந்து முடிந்தது. ஆனால், வாக்குப்பதிவு குறைவாகவே பதிவாகியிருந்தது. அதாவது, தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பிறகு, முதலில் 72 சதவிகித ஓட்டுகள் பதிவானதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்திருந்தார்.
இதையடுத்து நள்ளிரவில் அதை மாற்றி, 69.46 சதவிகித ஓட்டுகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் 69.72% ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி கூறியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, அதிகபட்சமாக தர்மபுரியில் 81.20% , குறைந்தபட்சம் மத்திய சென்னையில் 53.96 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
வாக்குப்பதிவு எண்ணிக்கை மூன்றாவது முறையாக மாற்றி கூறப்பட்டிருப்பதால் தமிழக அரசியல் கட்சிகள் குழப்பத்தில் உள்ளன.
விவரங்கள் பின்வருமாறு:
- திருவள்ளூர் - 68.59,
- வடசென்னை - 60.11,
- தென்சென்னை- 54.17 ,
- மத்திய சென்னை - 53.96
- ஸ்ரீபெரும்புதூர் - 60.25
- காஞ்சிபுரம்- 71.68
- அரக்கோணம் - 74.19
- வேலூர் - 73.53
- கிருஷ்ணகிரி - 71.50
- தர்மபுரி - 81.20
- திருவண்ணாமலை - 74.24
- ஆரணி - 75.76
- விழுப்புரம் - 76.52
- கள்ளக்குறிச்சி - 79.21
- சேலம் - 78.16
- நாமக்கல் - 78.21
- ஈரோடு - 70.59
- திருப்பூர் - 70.62
- நீலகிரி - 70.95
- கோவை - 64.89
- பொள்ளாச்சி - 70.41
- திண்டுக்கல் - 71.14
- கரூர் - 78.70
- திருச்சி - 67.51
- பெரம்பலூர் - 77.43
- கடலூர் - 72.57
- சிதம்பரம் - 76.37
- மயிலாடுதுறை - 70.09
- நாகப்பட்டினம் - 71.94
- தஞ்சாவூர் - 68.27
- சிவகங்கை - 64.26
- மதுரை - 62.04
- தேனி - 69.84
- விருதுநகர்- 70.22
- ராமநாதபுரம் - 68.19
- துாத்துக்குடி - 66.88
- தென்காசி - 67.65
- திருநெல்வேலி - 64.10
- கன்னியாகுமரி- 65.44
No comments
Thank you for your comments