Breaking News

காஞ்சிபுரத்தில் ரூ 47.5 லட்சம் பறிமுதல்

 காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் அருகே ஏடிஎம் மையங்களுக்கு பணம் செலுத்த உரிய ஆவணங்கள்  எடுத்துவரப்பட்ட ரூ 47.5 லட்சம் பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருவாய் கோட்டாட்சியர் கலைவாணியிடம் ஒப்படைத்தனர்.


தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் பத்து தினங்களே உள்ள நிலையில் நேற்று முதல் பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழு உள்ளிட்ட குழுக்களின் வாகன சோதனைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. 

அவ்வகையில் பொன்னேரி கரை அருகே வட்டார வளர்ச்சி அலுவலர்  கோமாளா தலைமையிலான பறக்கும் படையினர் குழு காஞ்சிபுரத்திலிருந்து பரந்தூர் வழியாக செல்ல வந்த காரை நிறுத்தி வாகன சோதனை மேற்கொண்டனர். 


அப்போது அவ்வாகனத்தில் வந்தவாசி பகுதியைச் சேர்ந்த மோகன் மற்றும் புவனேஸ்வரி ஆகியோர்,  உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 47.5 லட்சம் மதிப்பிலான பணம் வைத்திருந்தனர்.

இது குறித்த எவ்வித ஆவணங்களும் முறையாக இல்லாததால் பறக்கும் படை குழுவினர் அப்பணத்தை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி இடம் ஒப்படைத்தனர். 

அவரிடம் விசாரணை மேற்கொண்ட கோட்டாட்சியரிடம் , தனியார் ஏடிஎம் ( இந்தியா ஓன்) மையங்களுக்கு  பணம் செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் வந்தவாசியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பணம் எடுத்து வரப்பட்டதாகும் தெரிவித்தனர். 

இருப்பினும் மாலை ஆறு மணிக்கு மேல் எந்த ஏடிஎம் மையங்களுக்கும் பணம் எடுத்து செல்லக்கூடாது என தேர்தலில் விதிகள் இருப்பதால் இப்பணத்தை கருவூலத்தில் வைத்து அதன்பின் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

No comments

Thank you for your comments