12-04-2024-ம் தேதி ராசி பலன்கள்
மேஷம்
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். விற்பனை சார்ந்த துறைகளில் ஆதாயம் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : அறிமுகம் ஏற்படும்.
பரணி : கவனம் வேண்டும்.
கிருத்திகை : ஆதாயம் ஏற்படும்.
ரிஷபம்
எதிலும் அலட்சியம் இன்றி செயல்படவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளால் மனவருத்தங்கள் நேரிடும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பணி சார்ந்த ரகசியங்களில் விவேகம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : போட்டிகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : அலைச்சல் ஏற்படும்.
மிதுனம்
குழந்தைகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் படிப்படியாக குறையும். பணி சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலை விலகும். பாராட்டு நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : நெருக்கடிகள் குறையும்.
புனர்பூசம் : கவலை விலகும்.
கடகம்
சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வித்தியாசமான அணுகுமுறைகளால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். பணிபுரியும் இடத்தில் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடக்கு
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூசம் : லாபம் மேம்படும்.
ஆயில்யம் : முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
வருமான உயர்வு குறித்த முயற்சிகள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகத்தில் பொறுமையை கையாளுவது நல்லது. வர்த்தகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்
மகம் : முயற்சிகள் மேம்படும்.
பூரம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
உத்திரம் : திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
கன்னி
தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தந்தை வழியில் அனுசரித்துச் செல்லவும். கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் வித்தியாசமான அனுபவம் ஏற்படும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். கடன் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கவலை விலகும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
அஸ்தம் : அனுபவம் ஏற்படும்.
சித்திரை : கவனம் வேண்டும்.
துலாம்
மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கமிஷன் சார்ந்த துறைகளில் லாபம் ஏற்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ப மேன்மை ஏற்படும். சகோதரர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மறைமுக திறமையால் மதிப்பு மேம்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
சித்திரை : லாபம் ஏற்படும்.
சுவாதி : மேன்மையான நாள்.
விசாகம் : நம்பிக்கை பிறக்கும்.
விருச்சிகம்
புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றமான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் பொறுமை வேண்டும். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடிவரும். மற்றவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். வாழ்க்கைத் துணைவர் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். அன்பு நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
விசாகம் : மாற்றமான நாள்.
அனுஷம் : வாய்ப்புகள் கைகூடிவரும்.
கேட்டை : புரிதல் அதிகரிக்கும்.
தனுசு
பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நினைத்த பணிகளில் அலைச்சல் உண்டாகும். உற்பத்தி தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். பழைய நினைவுகளால் மனதில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். கால்நடைகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்ப்பது நல்லது. மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அமைதி நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : இளம் ஊதா நிறம்
மூலம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூராடம் : சோர்வான நாள்.
உத்திராடம் : பிரச்சனைகள் நீங்கும்.
மகரம்
சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. வர்த்தகம் சார்ந்த முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விளையாட்டான பேச்சுக்களை தவிர்ப்பது பகைமையை குறைக்கும். மனதளவில் வித்தியாசமான கற்பனை அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடக்கு
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திராடம் : ஆலோசனை வேண்டும்.
திருவோணம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
அவிட்டம் : கற்பனை அதிகரிக்கும்.
கும்பம்
நீண்ட நாள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது சிக்கல்களை குறைக்கும். மனதளவில் வித்தியாசமான சிந்தனை பிறக்கும். பயணம் சார்ந்த விஷயங்களில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். கால்நடைகளால் சில விரயங்கள் ஏற்படும். புதிய வீடு வாங்குவது சார்ந்த செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். போட்டி நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
சதயம் : சிக்கல்கள் குறையும்.
பூரட்டாதி : விவேகம் வேண்டும்.
மீனம்
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறப்புகளால் அலைச்சல் உண்டாகும். பெரியவர்கள் இடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். தாயின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். விளையாட்டுத் தொடர்பான துறைகளில் அரசு உதவிகள் சாதகமாகும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் பொறுமை வேண்டும். ரசனை தன்மையில் சில மாற்றங்கள் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
பூரட்டாதி : அலைச்சல் உண்டாகும்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : மாற்றங்கள் ஏற்படும்.
No comments
Thank you for your comments