காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீ விஜயேந்திரர் ஜெயந்தி மகோற்சவம் தொடங்கியது
காஞ்சிபுரம், மார்ச்.5:
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70 வது பீடாதிபதியாக இருந்து வருபவர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது ஜெயந்தி மகோற்சவத்தையொட்டி ஸ்ரீ மடத்தில் காலையில் வேதபாராயணம், வித்வத் சதஸ்,மகாருத்ர ஜெபம், சதசண்டி ஹோமம் ஆகியன நடைபெற்றன.
இதனையடுத்து மடத்தில் உள்ள மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன.
![]() |
திருப்பதியில் நடைபெற்ற சுதர்சன ஹோமத்தில் பங்கேற்ற ஸ்ரீ விஜயேந்திரர் |
மாலையில் விதுஷி காயத்ரி வெங்கட்ராமன் குழுவினரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஸ்ரீ மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர்,ஸ்ரீகாரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.ஜெயந்தி மகோற்சவம் மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி நாளை வியாழக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.
திருப்பதியில்
ஸ்ரீ விஜயேந்திரரின் ஜெயந்தி மகோற்சவத்தையொட்டி திருப்பதியில் காஞ்சி காமகோடி பீடத்தின் பாதுகா மண்டபத்தில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், மகாருத்ர ஜெபம், சதசண்டி ஹோமம் ஆகியனவும் நடைபெற்றது.
திருப்பதியில் தற்போது முகாமிட்டுள்ள காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஹோமங்களில் கலந்து கொண்டார். சந்திர மௌலீசுவரருக்கு சிறப்பு பூஜைகளையும் நடத்தினார்.
No comments
Thank you for your comments