ஆட்டோ ரிக்ஷாக்களில் அதிக கட்டணம், முறையற்ற வாகன இயக்கம் குறித்து ஆய்வு கூட்டம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடிக்கடி ஆட்டோ ரிக்ஷாக்களில் அதிக கட்டணம் வசூலித்தல், விபத்துக்கள் ஏற்படும் வகையில் முறையற்ற வாகன இயக்கம் மற்றும் பொதுமக்களிடம் நல்லுறவு பேணாமை போன்ற புகார்கள் நுகர்வோர், மனித உரிமை மன்றம் மற்றும் பொதுமக்கள் போன்றவர்களிடமிருந்து வந்தவண்ணம் இருப்பதால், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்கணிப்பாளர் ஆகியோர்களின் உத்தரவின் படி வட்டார போக்குவரத்து அலுவலக சாலை பாதுகாப்பு அறையில் தினகரன் வ.போ.அலுவலர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம், நேர்முக உதவியாளர் செல்வம், கோபி கண்காணிப்பாளர், நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த ரமேஷ், மனித உரிமைகள் மக்கள் மன்றத்தை சேர்ந்த மார்க்ஸ் மற்றும் ஜோதி பிரகாசம் மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆட்டோ ஸ்டாண்ட் நிர்வாகிகள் மற்றும் ஓட்டுனர்கள் 75-க்கும் மேற்பட்டோர் கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் முதலில் ரமேஷ், மார்க்ஸ் மற்றும் ஜோதி பிரகாசம் ஆகியோர்களின் புகார்களை எடுத்துரைக்க வைத்து பின் அதற்க்கு எப்படி ஒவ்வொரு ஓட்டுனர்களும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை மிகத்தெளிவாக சட்ட முறைகளை மேற்கோள் காட்டி விளக்கிக்கூறியும் இடை இடையே ஓட்டுனர்களின் சந்தேகங்கள் கேள்விகளுக்கு பதிலுரைக்கூரியும் விளக்கமளித்தார்.
ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியின் இறுதியில் ஓட்டுனர்கள் அனைவரும் மோட்டார் வாகன ஆய்வாளர் கூறிய அறிவுரைகளை பின்பற்றி விபத்துக்கள் இன்றியும், முறையான கட்டணம் வசூலித்தும், பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் கனிவாக நடந்துகொள்வோம் எனவும் உறுதியளித்து சென்றனர்.


.jpg)
No comments
Thank you for your comments