Breaking News

சத்துணவுப் பணியாளர்கள் இருவர் இடைநீக்கம்

காஞ்சிபுரம், மார்ச் 5:

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர், சமையலர் ஆகிய இருவரை ஆட்சியர் கலைச்செல்விமோகன் செவ்வாய்க்கிழமை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இது குறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட கோவிந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு சத்துணவை கரண்டியில் வழங்காமல் கையில் சத்துணவு அமைப்பாளர் பரிமாறியுள்ளார். 

மாணவர்களும் சத்துணவை கையில் வாங்கியுள்ளனர். முட்டை சரியாக வேக வைக்காமலும், சத்துணவு தரமற்ற முறையிலும் சமைத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

No comments

Thank you for your comments