Breaking News

வேலூர் : தேர்தல் பார்வையாளர்களாக டாக்டர் ரூபேஷ் குமார், டாக்டர் சத்யஜித் நாயக் நியமனம்

வேலூர் :

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு  எண்.08 வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல்  பொது பார்வையாளராக டாக்டர் ரூபேஷ் குமார், இ.ஆ.ப.,  காவல் பார்வையாளராக டாக்டர் சத்யஜித் நாயக், இ.கா.ப.,   நியமிக்கப்பட்டுள்ளனர்.



வேலூர்  மாவட்டத்திற்கு    வருகைபுரிந்த  வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல்  பொது பார்வையாளர் டாக்டர் ரூபேஷ் குமார்  மற்றும் காவல் பார்வையாளர் டாக்டர் சத்யஜித் நாயக்  ஆகியோரை வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர்  மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்  வே. இரா. சுப்புலெட்சுமி  நேற்று (27.03.2024)  விருந்தினர்  மாளிகையில்   பூங்கொத்து வழங்கி  வரவேற்றார்.

தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் ரூபேஷ் குமார்,  மாவட்ட தேர்தல் அலுவலர், கூடுதல் தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் தொடர்பான பொறுப்பு அலுவலர்களுடன் தனித்தனியே ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். 

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம்  வேட்புமனுக்களை வழங்கும்  நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

தேர்தல் பார்வையாளர்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, நாள் மற்றும் நேரம்: 

1.பொது பார்வையாளர் டாக்டர் ரூபேஷ் குமார்,   கைப்பேசி எண் -7598498549.  

முகவரி :  அறை எண் 1 , புதிய விருந்தினர் மாளிகை, அண்ணாசாலை, வேலூர். நாள்தோறும் காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை.

2 காவல் பார்வையாளர் டாக்டர் சத்யஜித் நாயக்,  கைப்பேசி எண்- 7598498550.

முகவரி: அறை எண் 2 , புதிய விருந்தினர் மாளிகை, அண்ணாசாலை, வேலூர். திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை.

எனவே வேலூர் பாராளுமன்ற தொகுதியை உள்ளடக்கிய  வேலூர், அணைக்கட்டு , கீ.வ.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர்  ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சார்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் காவல் பார்வையாளர்களிடம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இடம் மற்றும் நேரத்தின்படி  நேரடியாக சந்தித்தும், கைப்பேசி வாயிலாகவும்  தேர்தல் தொடர்பான புகார்களை  தெரிவிக்கலாம் என  வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர்  மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி  தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்


No comments

Thank you for your comments