Breaking News

திமுக வேட்பாளர் செல்வம் வேட்பு மனு தாக்கல் - அமைச்சர் எம்எல்ஏக்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்  :       

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் சிறு வேடல்  க. செல்வம் காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் ஆகியோரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 


பின்னர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலம் இந்திரா காந்தி சாலை, காமராஜர் தெரு, வள்ளல் பச்சையப்பன்  தெரு, வழியாக கலெக்டர் அலுவலகம் சென்று  மாவட்ட கலெக்டரும், தேர்தல்  அலுவலருமான   கலைச் செல்வி மோகனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் .

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி,  திமுக மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் , காங் கட்சி சார்பில்  அருள், ஐயப்பன்,  குமரகுருநாதன், நாதன், இந்திய முஸ்லிம் க் கட்சி மாவட்ட செயலாளர் அஸ்லாம் பாஷா, சலீம் , மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முன்னா மக்கள் நீதி மையம் சார்பில் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி.சங்கர்,இ. முத்துக்குமார்,கே. நேரு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  பி.வி ஸ்ரீனிவாசன் லட்சுமிபதி, மதிமுக சார்பில் கருணாகரன், திராவிட கழகம் சார்பில் மாவட்ட தலைவர் முரளி, மாவட்ட செயலாளர் இளைய வேல்,விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மு.க தமிழரசு, பாசறை செல்வராஜ், மதிஆதவன் ,தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பொன்மொழி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர் 

கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர்கள் பி எம் குமார் , படு நெல்லி பாபு, மற்றும் திமுக நிர்வாகிகள் வர்த்தக அணி துணை செயலாளர் வி. எஸ் ராமகிருஷ்ணன், எஸ்கேபி சீனிவாசன், சிகாமணி, இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ் எம் எஸ் சுகுமார்,  பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், திலகர், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments