குழந்தைகளை கடத்துவதாக கூறுவது வதந்தி- காஞ்சிபுரம் எஸ்பி அறிக்கை
காஞ்சிபுரம், மார்ச் 5
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் குழந்தை கடத்தல்கள் நடைபெறுவதாக பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது.இவை உண்மைக்கு புறம்பானது.இதனால் பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை.
குழந்தைகளை கடத்துவதாக வரும் புகைப்படங்களும், வீடியோக்களும் போலியானவை. பொய்யான செய்திகளை சமூக வலை தளங்களில் பகிர வேண்டாம். அவ்வாறு பகிரப்படுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
சமூக வலை தளங்களில் தவறான தகவல்களைப் பற்றிய விபரங்களை பொதுமக்கள் காவல்துறையின் அவசர உதவி எண் 100 அல்லது காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்.044-27236111 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments