Breaking News

வாள் வீச்சு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லதா.. ஆட்சியரை சந்தித்து வாழ்த்து

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-ஆவது தேசிய அளவிலான  வாள் வீச்சு போட்டியில் கலந்துகொண்டு தேசிய அளவில்    சேபர் குழு விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற திருமதி. லதா  அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.




மாற்றுத்திறனாளிகளுக்கான 16-ஆவது தேசிய அளவிலான  வாள் வீச்சு போட்டி கோயம்புத்தூர் 20.03.2024 முதல் ஜூன் 24.03.2024 வரை நடைபெற்றது. தேசிய அளவில் 20 மாநிலங்களிலே இருந்து 200 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி  விளையாட்டு வீரர்கள் கலந்துக்கொண்டனர்.

தமிழகத்தில்  இருந்து வாள் வீச்சு விளையாட்டு வீரர்கள் 14 பேர் கலந்து கொண்டனர். அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த திருமதி.லதா,  திருமதி.எழிலரசி, திருமதி.சங்கீதா, திரு.ஜோசப் சுரேஷ், ஆகியோர் கலந்து கொண்டு பெருமை சேர்த்து  கொடுத்துள்ளனர். 

இதில் திருமதி.லதா என்பவர் அங்கன்வாடி பணியாளராக  காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாரத்தில் பணிபுரிந்து வருகிறார்.  இவர்   வாள் வீச்சு போட்டியில் கலந்துகொண்டு தேசிய அளவில்    சேபர் குழு விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்று  தமிழகத்திற்கும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.  இவர்  மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

உடன் மாவட்ட திட்ட அலுவலர்  (ஒருங்கிணைந்த  குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள்) திரு.பா.கந்தன், வாலாஜாபாத் ஒன்றியம்  ஒருங்கிணைந்த  குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி. இந்திரா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  திருமதி.மலர்விழி ஆகியோர் உடன் இருந்தனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments