மூதாட்டிக்கு உதவிய ஆய்வாளருக்கு பாராட்டு
தென்காசி:
தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் ஆய்வாளர் செந்தில்மாறன் ஆலங்குளத்தில் அவரது பணியை முடித்துவிட்டு மீண்டும் ஊத்துமலை காவல் நிலையத் திற்கு சென்று கொண்டிருந்த போது, கிடாரக் குளம் ஊரின் வெளியே சாலையோரமாக 80 வயது மூதாட்டி தள்ளாடியபடி நடந்து சென்று கொண்டிருப்பதை பார்த்து அந்த மூதாட்டியை அவரது வாகனத்தில் ஏற்றி மூதாட்டியை பாதுகாப்பாக வீட்டில் சேர்த்துள்ளார்.
காவல் ஆய்வாளரின் இத்தகைய மனிதாபிமானமிக்க செயலை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
No comments
Thank you for your comments