Breaking News

திமுக பொதுக்கூட்டத்தின் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு

 திருச்சி, மார்ச் 21-

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின்,  இண்டியா கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து நாளை (22-03-2024) முதல் தனது தேர்தல் பிரசாரத்தை துவங்கவுள்ளார்.


மேலும், திருச்சி, பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி  வேட்பாளர்களுக்கு மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கவுள்ளார். 

இதனை முன்னிட்டு திருச்சி சிறுகனூரில் நடைபெறவுள்ள மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தின் முன்னேற்பாட்டுப் பணிகளை,  திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டார். உடன் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் உடன் இருந்தனர்.

இதுகுறித்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் பதிவில், கழக வீரர்களின் கோட்டையாம் #திருச்சி மலைக்கோட்டையில் நடைபெறவிருக்கும் 2024 ஜனநாயகப் போரின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் வெற்றி முழக்கமிடுவோம் வாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

No comments

Thank you for your comments