தமிழ்நாடு அரசின் திட்டங்கள், சாதனைகள் புகைப்படக் கண்காட்சி - அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம் :
மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சாதனைகள் மற்றும் தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளன.
தமிழ்நாடு அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்த திட்டங்களான, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், மக்களைத் தேடிமருத்துவம், உங்களைதேடி உங்கள் ஊரில், நீங்கள் நலமா, கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், பன்னாட்டு நிறுவனங்களுடன் புதிய தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சரின் காலை உணவுதிட்டம், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல், மகளிர் சுயஉதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது, முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து அமைப்பப்பட்டுள்ள சிறப்பு புகைப்படக்கண்காட்சியினை பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், திரளாக பார்வையிட்டு, அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து தெரிந்து பயன்பெறுவதற்காக இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன என மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை அதிநவீன மின்னணு வாகனத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை பார்வையிட்டு, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற மாணவ/மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளையும், பல்வேறு துறைகளின் சார்பில் வைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் பார்வையிட்டார்கள். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 19 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.18,24,209/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும்,
4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.4,24,000/- மதிப்பிலான பேட்டரி வீல் சேர்களும் வழங்கி, மாவட்ட தொழில் மையம் சார்பில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய ஆட்டோக்களையும் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.வை.ஜெயக்குமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத் தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், திருப்பெரும்புதூர் ஒன்றியக் குழுத்தலைவர், திரு.எஸ்.டி.கருணாநிதி, வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.ஆர்.கே.தேவேந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மாணவ/மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
.jpg)


No comments
Thank you for your comments