வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் கலெக்டர் கலைசெல்வி மோகன்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பெரிய காஞ்சிபுரம் பகுதியில் ரூ. 4.6 கோடி மதிப்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலம் கட்டப்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு மார்க்கெட் கட்டிட பணிகளை பார்வையிட்டு, தேரடி தெருவில் ரூ.25 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பின்பு மளிகை தெரு நியாய விலை கடையினை பார்வையிட்டு, பொருட்களின் இருப்பு பதிவேடு பார்வையிட்டு, பொருட்கள் வாங்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்கள். மேலும் நியாய விலைக் கடை ஊழியர்களிடம் கடையினை சுத்தமாக வைத்துக் கொள்ள அறிவுரை வழங்கினார்.
இவ் ஆய்வின் போது காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் திரு.செந்தில் முருகன், மாநகராட்சி பொறியாளர் திரு.கணேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments