எடப்பாடி பழனிச்சாமி போல் இடத்திற்கு ஏற்றார் போல் பேசும் பழக்கம் திமுகவிற்கு இல்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக செல்வம் அறிவிக்கப்பட்டு இன்று வேட்பு மனு தாக்கல் செய்து பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு ஆதரவாக தமிழக இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரம் தேரடி பகுதியில் திறந்தவெளி வேனில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட காஞ்சிபுரம் செங்கல்பட்டு ரயில் பாதை இருவழிப் பாதையாக மாற்றப்படும், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையம் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி தன்னை செல்ல நிமிடங்கள் அனைத்திலும் ஒரே மாதிரியாக பேசுவதாகவும் அதனை மாற்றும்படி கூறினார். அதற்கு காஞ்சியில் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், திமுக வை சேர்ந்தவர்கள் எப்போதும் ஒரே மாதிரி நிலையை கொண்டவர்கள் எனவும் பச்சோந்திகள் அல்ல எனவும் எடப்பாடி பழனிச்சாமி போல் ஆளுக்கு ஏற்றார் போல் இடம் மாற்றம் செய்யும் நிலை தங்களுக்கு இல்லை எனவும், திமுக மாநில உரிமை நீட் தேர்வு விலக்கு , எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும் அன்றிலிருந்து இன்று வரை கோரப்பட்டு வரும் வாக்குறுதிகளும் கோரிக்கைகளும் ஆகும் என தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு முன்பு பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு விருந்தினர் பதிவேட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி இல்லத்தில் இருந்து மாநில உரிமைகளை மீட்க தலைவரின் குரல் இரண்டாம் கட்ட நாடாளுமன்ற பிரச்சார பயணத்தை மேற்கொள்வதில் பெருமைக் கொள்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார். குறிப்பேட்டில் எழுதினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், எடப்பாடி பழனிச்சாமி இடத்திற்கு தகுந்தவாறு மாற்றி மாற்றி பேசுவார்,ஆனால் நாங்கள் எப்போதும் ஓரே மாறிதான் பேசுவோம்...எய்மஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும் வரை செங்கலை விடமாட்டேன் என கூறினார்.
இந்நிகழ்வின் போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள்,உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்



No comments
Thank you for your comments